சௌபாக்கிய வீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11000 வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட உள்ளீடுகள் வழங்கல்

பனை அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் பணை விதை நடுகை செயற்றிட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக இவ்வருத்திற்கான பனம் விதை நடும் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிமடு கண்டத்தில் பனம் விதை நடும் செயற்றிட்டம் இன்று(13) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்பு தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விவசாய அமைப்புகளுக்கு பனம் விதைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், வயல் வீதியோரமாக பிரதேச செயலாளர் வி.தவராஜாவினால் பனம் வதை நாட்டி வைக்கப்பட்டது.

அத்தோடு விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத் திட்டத்திக் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11000 வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட உள்ளீடுகள் வழங்கும் செயற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளிகளுக்கு வழங்கும் செயற்றிட்டம் இடம்பெற்று வருகின்றது.

அதில் முதல் கட்டமாக காதிநகர் வீட்டுத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான விதைப் பொதிகள் பிரதேச செயலாளர் வி.தவராஜாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.