கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகள் சொல்லிலடங்காதவை -இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும் ஆனால் செயல் வடிவம் கொடுக்க முடியது என மட்டக்களப்பில் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவின் மட்டக்களப்புத் தொகுதிக்கான இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகளும், அதிகாரங்களும், சொல்லிலடங்காதவை. “கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி” எனும் பாரதியாரின் கவிதையைப்போல்தான் அடைக்கலநாதன் அவர்களின் கருத்து இருக்கின்றது. கடந்த 72 வருடகாலத்தில் அவர்கள் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவைகள் சொல்லிலடங்காது. அதனை வைப்பதற்கே இடமில்லாமலுள்ளது என்றார் .
கருத்துக்களேதுமில்லை