மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக சாணக்கியன், ஜனா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் – எம்.ஏ.சுமந்திரன்!

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை இன்று(13) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்துவருவதாகவும், தற்போது தங்களை அங்குவரும் பெரும்பான்மையினர் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் மாடு வளர்க்கும் தமது பகுதிகளை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் பண்ணையாளர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த விடயத்தில் தங்களுக்கு நீதி பெற்றுதர வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன் மற்றும் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்