பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முடக்க நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும்-வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்

இன்று மாலை வெளியாகும் பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முடக்க நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கொரோனா தொற்று நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் (13)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு உடுவில் கோட்டப் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கான ஆலோசனை, மாகாண கல்வித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தமக்கு காய்ச்சல், இருமல் போன்றன அறிகுறிகள்  தென்பட்டால் 021 222 66 66 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்