வாழைச்சேனை- புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து பொருட்களை திருடியதாக நான்கு பேர் கைது!
வாழைச்சேனை- புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து பொருட்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு கொவிட் நோயாளிகளை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு கடந்த 12 ஆம் திகதி நிறைவடைந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றை களவாடியுள்ளதாக வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளககமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் மஸ்கெலிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை