வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு பரிசோதனையில் 27 பேருக்கு எச்சரிக்கை!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மீராவோடை தமிழ் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் இருப்பத்தேழு பேருக்கு எச்சரிக்கை சிவப்பு துண்டு வழங்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மிராவோடை தமிழ் கிராமத்திலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று திங்கட்;கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தலைமையில் இடம்பெற்ற பரிசோதனையில் பொது சுகாதார பரிசோதகர்களான எம்.எஸ்.நௌபர், எஸ்.யசோதரன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்;, கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்த இருப்பத்தேழு பேருக்கு எச்சரிக்கை சிவப்பு துண்டு வழங்கப்பட்டதுடன், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்கள் சுத்தம் இல்லாமல் மீண்டும் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஒலிபெருக்கு மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.