பெரிய வெங்காயம் என கூறி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது!

பெரிய வெங்காயம் என கூறி சட்டவிரோதமான முறை யில் நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுமார் 90 இலட்சம் பெறுமதியான 25 ஆயி ரத்து 450 கிலோ மஞ்சள் சுங்கத் திணைக்கள அதிகாரி களால் கண்டுபிடிக்கப்பட்டது அத்தோடு குறித்த கொள் கலன்களில் பெரிய வெங்காயம் என்று கூறி நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டமை தெரியவந்துள்ளது.

கொழும்பு- புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர் குறித்த மஞ்சளைத் துபாயிலிருந்து 04 கொள்கலன்களில் கொண்டு வந்ததாகத் தெரிய வந் துள்ளது.

பெரிய வெங்காய இறக்குமதிக்கான வரியை 25 சதவீதத் தால் அரசாங்கம் குறைத்துள்ளது இந்நிலையில் வியா பாரிகள் சிலர் பெரிய வெங்காயம் இறக்குமதி செய் வதாகக் கூறி வேறு பல பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது என சுங்க திணைக் களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.