மாளிகைக்காட்டில் தடை போட்டு கட்டப்பட்டிருந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டது…

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர். அதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய சுகாதார ஊழியர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மட்டுமின்றி மாளிகைக்காடு மத்தி- கிழக்கு மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லைகளை இணைக்கும் உள்ளகப்பாதைகள் கயிற்றினால் மறிக்கப்பட்டு இன்று மாலை போக்குவரத்து தடைபோடப்பட்டிருந்தது. அதனால் எழுந்த பொதுமக்களின் விமர்சனங்களை அடுத்து காரைதீவு பிரதேச செயலக அதிகாரியினால் அந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வினவிய போது சாய்ந்தமருது- மாளிகைக்காடு மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். அவர்களை குறித்த எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கஷ்டமான ஒரு செயலாகும்.  வீதித் தடையைப் போட்டு சனநெரிசலை வெகுவாக குறைத்து மக்களூடாக கொரோனா பரவுதலை தடுக்கும் நோக்கில்தான் இத்தடையை மேற்கொண்டிருந்தனர். இருந்தாலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எடுக்கும் தீர்மானங்களையே இங்கு இலகுவாக அமுல்படுத்த முடியும். இருந்தாலும் சமூக பரவலை தடுத்து கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுதலை பெற சுகாதார வழிமுறைகளை பேணி நடப்பதுடன் வீணான பயணங்களை தவிர்த்து வீடுகள் தங்கி இருப்பதே சிறந்தது என காரைதீவு பிரதேச செயலக அவ் அதிகாரி தெரிவித்தார்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தினால் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.