வெடித்துச் சிதறியது கிரைண்டரில் அரைத்த ரி.என்.ரி. வெடிபொருள் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயம்; யாழ். குருநகரில் சம்பவம்…

யாழ்ப்பாணம், குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையால் இரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.

குருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமட் தயாரிக்கும் நோக்கில் ரி.என்.ரி. வெடிபொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார். குறித்த வெடிபொருள் அதிக கல்லுத் தன்மையாகக் காணப்பட்டுள்ளது.

இதனால் அந்த வெடிபொருளை கிரைண்டரில் போட்டு குறித்த மீனவர் அரைத்துள்ளார்.

இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிக்கி வீட்டிலிருந்த 8 பேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்களில் மூவர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.