லங்கா பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தகுதி !

லங்கா பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தகுதிபெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று   (14) இடம்பெற்ற  போட்டியில் ஜெப்னா ஸ்ராலியன்ஸ் – தம்புள்ளை வைகிங் அணிகள் மோதின.
போட்டியில் தம்புள்ளை அணிக்கு எதிராக முதலில் ஆடிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஜோன்ஸ்ரன் சார்லஸ் 56 பந்துகளில் (76), அவிஸ்க பெர்னாண்டோ (39) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மலிந்த புஸ்பகுமார (24/2) விக்கெட்களை வீழ்த்தினார்.
166 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைகிங் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அதிகபட்சமாக உபுல் தரங்க 33 ஓட்டங்களையும், திக்வெல்ல 28 ஓட்டங்கள் , ஆர்.மெந்திஸ் 26 ஓட்டங்கள். பந்து வீச்சில் ஹசரங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி மற்றும் காலி கிலடியேடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்