முல்லைத்தீவு -மீனவர் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க போலீசார் தடை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்களால் 15.12.2020 இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் தகரப் பந்தல் அமைப்பதற்கு முயற்சி எடுத்திருந்தனர்.

இவ்வாறு மீனவர்கள் தகரப் பந்தல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குவந்த முல்லைத்தீவுப் போலீசார் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடுத்துள்ளனர்.

இந் நிலையில் பந்தல் அமைப்பதற்கு கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் அனுமதியை மீனவர்கள் நாடியுள்ளனர்.

மேலும் போராட்ட இடத்தில் தற்போதுமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோர் மீனவர்களுடன் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.