மாகாண சபை தேர்தல் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம்-வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

மாகாண சபை தேர்தலை துரிதப்படுத்துவதற்கான பரிந்துரை மற்றும் கருத்துக்களை கேட்டறிவதற்காக கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மாகாண சபை தேர்தலை துரிதப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட விடயதான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைவாக இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த நிலைப்பாடு குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தும் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, தடுப்பூசியை களஞ்சியப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் முதலில் கவனம் செலுத்தி அதன் பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் நடடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய மாலைத்தீவு அரசாங்கத்திடம் ஒத்துழைப்பு கேட்க்கப்பட்டதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலாளிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக மாலைத்தீவு அரசாங்கத்திடம் ஒத்துழைப்பு கேட்க்கப்பட்டதா என்பது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவில்லை என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வது இதுதொடர்பாக விடயங்களை கண்டறிந்து சிபாரிசுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாகவே மாத்திரமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.