சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,பதாகை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டம்…

ஹஸ்பர் ஏ ஹலீம்_
“சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் “என்ற தொனிப்பொருளில் இன்று (16)கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி அவர்கள் பதாதைகளை ஏந்தி கவன் சீலை வெள்ளை துணிகளை கட்டி தமது உரிமைப் போராட்டத்தை அமைதியான முறையில்  நடத்தினார்.
அங்கு கருத்து தெரிவித்த  நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்கள் பல்லின சமூகம் வாழுகின்ற பழமொழிகள் பேசப்படுகின்ற பல்வேறு மத, சமய, கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழுகின்ற இந்த இலங்கைத் திருநாட்டிலே சிறுபான்மை சமூகத்தின் வாழ்வுரிமை, மத உரிமை ,கலாச்சார உரிமை, நில உரிமை  பாதுகாக்கப்படுகின்ற போது தான் இன நல்லிணக்கத்தோடு, பிரச்சினைகள் இன்றி இந்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
ஆனால் இந் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வழங்குவதில் எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் குறை சொல்லி சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான குரல்களை எழுப்பி ஆட்சிக்கு வருகின்றனர்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையினை இல்லாமல் செய்து கட்டாயத்தின் பேரில் அரசாங்கத்தினால் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றன. இது மிகவும் கண்டிக்கப்பட கூடிய விடயமாகும். குறிப்பாக பிறந்து  20 நாட்களே ஆன ஒரு குழந்தையின் உடல் கூட எரிக்கப்பட்டது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு இன் நாட்டு மக்கள் உட்பட உலக நாடுகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி இருப்பது மிகவும் வேதனையான விடயமுமாகும்.

எனவே இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமையான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வழங்கி சுபிட்சமான, ஒற்றுமையான வாழ்க்கை கட்டமைப்பை ஏற்படுத்துவதை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.