கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கை…

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று புதன்;கிழமை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்ற பரிசோதனையில் பொது சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுகாதார பணிமனையின் டெங்கு தடுப்பு உதவியாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்;, பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்கள் சுத்தம் இல்லாமல் மீண்டும் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டு வளாகத்தினுள் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நீர் தேங்கி காணப்படும் பொருட்கள், கழிவுப் பொருட்கள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் அகற்றப்பட்டு வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன், மக்களுக்கு தெளிவூட்டலும் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.