வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் கொரோனாவை முன்னிறுத்தி கல்முனை மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு :தங்களின் தொழில் நடவடிக்கை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை

அம்பாரை மாவட்டத்தில் ஆழ்கடல் இயந்திர மீன்பிடி படகுகளை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி
வைப்பதற்கு சிக்கல் நிலை உள்ளதாகவும் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று
இருப்பதாக கூறி தமது ஆழ்கடல் படகுகள் வாழைச்சேனை பகுதிக்கு வர வேண்டாமென இடைஞ்சல் விளைவிப்பதாகவும் தெரிவித்து
இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்று தர வேண்டும் என அம்பாரை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கல்முனையில் கோரிக்கைளை முன்வைத்து இன்று (16) கவனயீர்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீனவர்கள்,

தங்களுடைய மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள எங்களுக்கு உதவி செய்யுங்கள் மேலும் எங்களுடைய மீனவ படகுகள்

வாழைச்சேனை பகுதியில்கட்டுவதில் இங்குள்ள மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

கடந்த பல வருடங்ளாக இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. ஆனால் இப்போது கொரோனா தொற்று காலம் என்பதால் பிரச்சினை அதிகரித்துள்ளது.

எங்களுக்கென்று முறையான மீனவ துறைமுகம் இல்லாது இருப்பதை பல கட்டங்களாக போராட்டங்கள் மூலமாகவும், அரசியல்வாதிகளுக்கு மகஜர் கையளித்தும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வந்துள்ளோம். ஆனால் அது ஒன்றும் வேலைக்கு ஆன பலன் இல்லை. ஒலுவில் பகுதியில் மீன்பிடி துறைமுகம் காணப்பட்டாலும் படகுகளை தரித்து நிற்க கூடிய நிலையில்லாமல் உள்ளது .

இப்போது நாட்டில் பரவலாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் எங்களின் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைப்பதில் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது.கொரோனா அச்சம் காரணமாக எங்களை வாழைச்சேனை பிரதேசத்தில் நுழைய அனுமதிக்கிறார்கள் இல்லை

அம்பாரை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் சுமார் 300 க்கு மேற்பட்ட  படகுகள் உள்ளது.
இந்த கடலை நம்பியே நாங்கள் தொழிலையே செய்கிறோம் தற்போது கடலில் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது நாங்கள் எவ்வாறு குடும்பத்தை பார்பது என ஆழ்கடலில் மீனவர்கள் கேள்வியெழுப்பினர்

இவ்விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்த மீன்பிடி அமைச்சர்   ஆகியோர் தலையிட்டு உடனடியாக  தீர்வொன்றை பெற்றுத்தர முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.-

என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.