நாட்டில் மேலும் கொரோனா ரைவஸ் சிகிச்சை நிலையங்களை நிறுவுவதற்கு, சுகாதார அமைச்சு முடிவு

பல்வேறு மாவட்டங்களில், நாளுக்கு நாள், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், நாட்டில் மேலும் கொரோனா ரைவஸ் சிகிச்சை நிலையங்களை நிறுவுவதற்கு, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அதிகளவு நோயாளார்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறனைக் கொண்ட வைத்தியசாலைகளைக் கையகப்படுத்துமாறு, சுகாதார அமைச்சர் பவிரத்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான வைத்தியசாலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கொரோனா வைரஸ் சிகிச்சை வசதி கொண்ட வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கான பூர்வாங்க நிதி. சுகாதார அமைச்சில் இருந்து ஒதுக்கப்படும் என்றும் அதற்குத் தேவையான மேலதிக நிதி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினசரி 500 – 600 நோயாளர்கள் கண்டறியப்படுகின்றமையால், இந்த சிகிச்சை நிலையங்களை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.