கல்முனை தெற்கு சுகாதார  வைத்திய அதிகாரி எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை செயிலான் வீதி -அம்மன் கோவில் வீதி வரை..

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை தெற்கு சுகாதார  வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட கடற்கரை பள்ளி உள்ளடங்கலாக அம்மன் கோவில் வீதியில் இருந்து செயிலான் வீதி வரை  மறுஅறிவித்தல் வரை  மூடப்படுவதாக  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  அறிவித்துள்ளார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் எழுந்தமானமாக எடுக்கப்பட்ட 90 பரிசோதனைகளில் 14 பேர தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இன்று (16) மேற்குறித்த பிரதேசங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் பிராந்திய தொற்று நோய் தடுப்பியலாளர் வைத்தியர் என்.எப்.  ஆரிப் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரிஸ்னி ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதன் படி கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட  செயிலான் வீதி கடற்கரை பள்ளிவாசல் உள்ளடங்கலாக அம்மன் கோவில் வீதி வரை   மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பில் இன்று இரவு 8.30 மணியளவில் வர்த்தக சமூகம் உடபட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்களும் தேநீர் கடைகளும் தற்காலிகமாக  இன்று (16) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இரவு 8.00 மணிக்கு முன்னதாக மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

றிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.