யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி-வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 110 பேருக்கான பி.சி.

ஆர். பரிசோதனையிலேயே இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த இருவரும் சுன்னாகம் பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.