36 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேற்றும் 660 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 32 ஆயிரத்து 380 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 27 ஆயிரத்து 61 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 165 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.