பொதுமக்களின் பங்களிப்பில் தான் கொவிட் 19 ஒழிப்பு தங்கியுள்ளது-வைத்தியர் ஜி.சுகுணன்

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற  கொவிட் தொற்றாளர்களான  81 வீதமானவர்களை  கல்முனை பிராந்தியம் கொண்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை(18) மாலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தலைமையில் நடைபெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தின் பின்னரான செய்தியாளர் மாநாட்டில்   கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற  கொவிட் தொற்றாளர்களான  81 வீதமானவர்களை  கல்முனை பிராந்தியம் கொண்டுள்ளது.இதனால் எமது நடவடிக்கைகளை மேம்படுத்தும் நிலையில் நாம் இருக்கின்றோம்.அக்கரைப்பற்று உப கொத்தணியை தொடர்ந்து நேற்று(17) பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் 12 கிராம சேவை பிரிவுகள் தனிமைப்படுத்தல் இடங்களாக உள்ளன. முகநூலில் போலியான தகவல்களை எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களின் பாதுகாப்பு சுகாதார தரப்பினரின் பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கப்பெறவுள்ளது.பொலிஸாரும் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு எமக்கு உறுதுணையாக இருப்பார்கள்.கிராம மட்ட குழுக்களை அமைத்து இவ்விடயம் தொடர்பில் ஆராய்தலும் முக்கிய விடயமாக அமைகின்றது.இதில் மதத்தலைவர்கள் கிராம தலைவர்களை இணைத்து எவ்வாறு செயற்படுவது என்ற விடயத்தை ஆராய்ந்தோம்.இதற்கு நாம் ஆலோசனைகளை வழங்கவுள்ளோம்.
சாய்ந்தமருது மருதமுனையில் இவ்வாறான குழுக்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.இதனால் சுகாதார துறையாகிய நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.எனவே தான் பொதுமக்களின் பங்களிப்பில் தான்  கொவிட் 19 ஒழிப்பு தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.