வானில் இன்று ஒன்றுசேரவுள்ள விசேட கிரகங்கள்….
வானில் இன்று சனிக்கிழமை (19)இரவு விசேட கிரகங்கள் ஒன்று சேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை