பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்

தற்பொழுது கொரோனா தொற்று அனர்த்தம் கூடுதலாகவுள்ள பகுதியில் உள்ள மக்கள் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு வெளிமாவட்டங்களில் ஓரளவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில், நாம் அனைவரது கவனத்திற்கு கொண்டுவருவது என்னவெனில், இதுவரையில் நாம் வாழ்ந்து வந்தமை தொற்றுள்ள அனர்த்த பிரதேசத்தில் ஆகும். இந்த பிரதேசங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதாயின், அதாவது அத்தியவசிய தேவை இருக்குமாயின் மாத்திரம் வெளியே செல்லுமாறு நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

முடிந்த வரையில் தாம் குடியிருக்கும் பகுதியிலேயே தங்கியிருக்குமாறு நாம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம். தற்பொழுது கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் நோய் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. வெளியிடங்களில் ஓரளவுக்கு நோயை காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு காரணம் இந்த அனர்த்த பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு மக்கள் செல்வது அல்லது அந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் இந்த அனர்த்த பிரதேசங்களுக்கு வருவதினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்காவது தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதாவது தடுமன், இருமல் போன்றவை இருக்குமாயின், அது தொடர்பில் வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், அனர்த்தத்திற்கு மத்தியில் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பும் பொழுது ஆகக்கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டும். சுகாதார பாதுகாப்பு முறைக்கு உட்பட்டதாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் விசேட கவனம் செலுத்துவதுடன், விசேட பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி. சித்ரமாலி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், வகுப்புக்களை தொடங்குவதற்கு பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பும் பொழுது பெற்றோர் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதேபோன்று பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் தொற்றை எடுத்துவராத வகையில் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொலைநோக்கு கல்வி மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மாணவர்கள் உடல் ரீதியிலான செயற்பாட்டுடன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும். இதேபோன்று மற்ற மாணவர்களுடன் உமது பிள்ளைகள் பழக வேண்டும் இவ்வாறான நடைமுறைகள் முக்கியமானதாகும். செயல்முறையிலான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறப்பது முக்கியமானதாகும்.

இதேபோன்று பிள்ளைகளின் போக்குவரத்து விடயத்திலும் பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். அது சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் வீடுகளுக்கு வந்த பின்னர் பெற்றோர் அவர்களை முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவர்களது உடல் சுத்தத்தை பேணி வீடுகளுக்குள் அழைப்பதில் பெற்றோர் பொறுப்பாக செயற்படவேண்டும். இதேபோன்று பாடசாலை கென்டின் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேவையான உணவுகளை பெற்றோர் வீடுகளிலேயே தயாரித்து வழங்குவது முக்கியமானதாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.