லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் வீரர்கள் கௌரவிப்பு!

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடமாகாணம் சார்பில் யப்னா ஸ்ரலியன்ஸ் அணிக்காக பங்கு கொண்ட வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று(19) இடம்பெற்றது.

தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் யாழ் துடுப்பாட்ட சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சி அரியாலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள் மேள வாத்தியம் முழங்க நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜேயராஜ் ஆகிய வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட ரதீபனும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்