மட்டக்களப்பு -தாளங்குடாவில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சக்திவாய்ந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

 

ஆரையம்பதி தாளங்குடா கடற்கரை வீதியில் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றை இன்று (21) கூலித் தொழிலாளியொருவர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே பொலித்தீனால் சுற்றப்பட்ட நிலையில் இக்கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளையும், மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.