பொத்தானை அணைக்கடினை உடைத்து நீர் செல்வதால் ஐயாயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு..

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மண் மூடை அமைத்து தற்காலிக அணைக் கட்டினை அமைத்து விவசாய செய்கையை செயள்து வந்தனர்.

அந்த நிலையில் தற்போது ஆறு பெருக்கெடுத்தமையினால் தற்காலிக மண் மூடை அமைத்த அணைக்கட்டு தற்போது வெள்ளத்தில் உடைத்து முன்னர் உடைக்கப்பட்ட பொத்தானை அணைக்கட்டு ஊடாக சுமார் பதினைந்;து அடியில் வெள்ள நீர் செல்வதால் பொத்தானை பிரதேசத்திலுள்ள ஐயாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரில் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால் எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளான்மையை முற்று முழுதாக இழந்த நிலையிலும், இதன் காரணமாக பெற்றுக் கொண்ட கடன் தொகையை செலுத்துவது எவ்வாறு என்ற கவலையிலும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு புணாணை அணைக்கட்டின் பத்து வான் கதவுகளில் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டதுடன், அதுவும் பூரணமாக திறக்கப்படாது காணப்படுவதுடன், பத்து வான் கதவுகளும் திறக்கப்படும் பட்சத்தில் விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புணாணை அணைக்கட்டின் வான் கதவுக்கு செல்லும் நீரானது பதினொன்றரை அடி அளவில் நீர் செல்கின்றது. அதிலும் வான் கதவுகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் வான் கதவுகளுக்கு மேலாக நீர் வடிந்தோடுவதையும், அதி வேகமாக செல்வதையும் காண முடிகின்றது.

எனவே குறித்த விடயம் தொடர்பில் நீர்பாசன திணைக்களத்தினருக்கு விவசாய அமைப்பினரால் அறிவித்தல் வழங்கியும் இதுவரை குறித்த பகுதிக்கு வருகை தரவில்லை என்றும், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகவே பொத்தானை பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நன்மை கருதியும், தொடர்ச்சியாக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும் பொத்தானை அணைக்கட்டினை வெள்ள நீர் மூலம் உடைப்பெடுக்காத வகையில் புனரமைப்பு செய்து தருமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளை விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியாக நஷ்டத்தினை எதிர்கொள்ளாத வகையில் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் துரித நடவடிக்கை எடுக்க முன்வருமாறும்;, ஒவ்வொரு தடவையும் விவசாயிகளை ஏமாற்றாது செயற்படுமாறும் விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.