காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு…

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு 22/12/2020 இன்று அதிகாலை 05.30 இடம்பெற்றது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்றையதினம் கிரிகைகள் யாவும் கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் கிரியா கலாநிதி கணேச லோகநாத குருக்கள் அவர்களினால் நடைபெற்றது. மேலும் உதவி குருமாராகிய ஆலய பிரதம குரு சபா ரெட்ணம் குருக்கள், ஆகியோர் கலந்து அதிகாலை 05.30 மணிக்கு கிரிகைகள் யாவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சுப்பிரமணியம் ஜீவராணி அவர்களும் மேலும் ஆலய தலைவர் ஆறுமுகம், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ்,காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், ஆலயநிர்வாகத்தினர், மற்றும் காரைதீவு ஆலயங்களின் பிரதிநிதிகள் ஏன பலரும் கலந்து கொண்டனர்.பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்

கருத்துதெரிவிக்கையில்

இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் மக்கள் வீடுகளில் இருந்து வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்குமாறு இந்த நோய் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.