இலங்கையில் தீடிரென பெய்த மீன் மழை – ஆச்சரியத்தில் மக்கள்.

நாட்டில் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மஹியங்கனையில் மீன் மழை பெய்துள்ளது.

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று  மீன் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தொிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் அநேக இடங்களில் காணப்படும் மழை மற்றும் சிறு சூறாவளியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையால் இவ்வாறான மீன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.