அதிவேக  நெடுஞ்சாலையில் கொரோனா பரிசோதனைகள்!

அதிவேக  நெடுஞ்சாலையில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வௌியேறும் பகுதிகளில் எழுமாற்று பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமெனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.