காணிப் பயன்பாட்டுக்குழுக்கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளையும் உள்வாங்குங்கள் – ரவிகரன்

மாவட்ட மற்றும் பிரதேசமட்டக் காணிப் பயன்பாட்டுக்குழுக்கூட்டங்களில் மக்கள் பிரதிநிகளையும் உள்ளீர்க்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் 22.12.2020 அன்று இடம்பெற்றநிலையில் அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் குறித்த கோரிக்கையினை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரதேச மற்றும் மாவட்ட காணி பயன்பாட்டுக்குழுக் கூட்டங்களுக்கு மக்கள்பிரதிநிதிகள் அழைக்கப்படாததால் மக்களின் காணிகள் பலவும் அபகரிக்கப்படுகின்றது, இன்னு அபகரிக்கப்படும் அபாயம் இருக்கின்றது.

காணி பயன்பாட்டுக்குழுக்கூட்டங்களில் திணைக்கள அதிகாரிகள் மற்றும், படையினர் போன்றோர் இணைந்து காணி தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர்.

இந்நிலையில் படையினர் மக்களின் காணிகளை கோருகின்றபோது அரச அதிகாரிகள் அதற்கு மறுப்புத்தெரிவிக்கின்ற நிலை காணப்படாது. எனவே நிச்சயமாக மக்கள் பிரதிநிகள் காணிப் பயன்பாட்டுக்குழுக்கூட்டங்களுக்கு அழைக்கப்படவேண்டும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.