வவுனிக்குளக்கட்டால் வாகனங்கள் பயணிக்கமுடியாது; மந்தை கிழக்கு அபிவிருத்திக்குழுவில் தீர்மானம்.

வவுனிக்குளத்தினுடைய கட்டுப்பகுதியால் இனி மேல் வாகனங்களில் செல்ல முடியாதென 22.12.2020 அன்று இடபெற்ற மாந்தைகிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த வவுனிக்குளத்தின் கட்டுப்பகுதியால் பயணித்த வாகனம் ஒன்று குளத்திற்குள் தடம் புரண்டதில், குறித்த வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் இருபிள்ளைகள் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையிலேயே இத்தகைய தீர்மானம் ஒன்று மாந்தை கிழக்குப் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

குறித்த தீர்மானத்தினை வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் க.பிரகாஸ் அபிவிருத்திக்குழுவில் முன்மொழிந்ததையடுத்து அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்  குளக்கட்டில் வாகனங்கள் நுழைகின்ற பகுதிகளில், வாகனங்கள் வராதவாறு தடைகளை ஏற்படுத்துவதெனவும், மோட்டார்சைக்கள் மற்றும் சைக்கள் என்பவற்றின்மூலமே இனிவருங் காலங்களில் குளக்கட்டினூடாக பயணிக்கமுடியும் எனவும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.