மட்டக்களப்பு மாநகரசபையினால் வெள்ள நீரிணை வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநி லையின் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள நீரிணை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, மாநகர சபையின் அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் முன்னாயத்த நிலையியற் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு இப்பணிகளில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன், அனர்த்த அபாயக் குறைப்பு நிலையியற் குழுவின் தலைவர் த.இராஜேந்திரன் உள்ளிட்ட  மாநகர சபையின் உறுப்பினர்கள் பலரும் ஈடுபட்டனர்.

குறிப்பாக இருதயபுரம், கல்லடி, கல்லடி வேலூர், கூழாவடி, நொச்சுமுனை, திராய்மடு, பூம்புகார் போன்ற மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் துரித கதியில் நீரினை வெளியேற்றும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் வளங்களின் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு இவ் அவசர நிலமைகளை எதிர்கொள்வதற்காக JCB இயந்திரங்களை வெளியிலிருந்து வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இதனால் துரிதமாக வெள்ளநீரினை வெளியேற்றக் கூடியதாக உள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.
அத்துடன் பொது மக்களும், பிரதேச இளைஞர்களும் இப்பணிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.