அவசிய தேவையின்றி திருகோணமலைக்கு வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்
கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதாரப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதால் அத்தியவசிய காரணங்களை விடுத்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான முடிவுகளை எடுக்கும் மாகாண குழுக் கூட்டம் புதன்கிழமை (23) மாலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையிலேயே ஆளுநர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் விடுமுறை நாட்களில், பயண நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை