உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பில் அடுத்த ஆண்டில் ஐந்து புதிய திட்டங்கள்

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் ஐந்து புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மட்டக்களப்பில் உலக உணவுத் திட்டத்தினூடாக இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் நேற்று (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நடைறைப்படுத்தப்படவுள்ள 5 திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இவற்றில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் ஆடு, மாடு, கோழி வளர்பாளர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த அவற்றுக்கான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. 1 இலட்சத்தி 85 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்டுக் கொட்டில்கள், 82, 2 இலட்சத்தி 40 ஆயிரம் பெறுமதியான சகல வசதிகளும் கொண்ட 7 மாடு வளர்க்கும் கொட்டில்களும், 1 இலட்சத்தி 7 ஆயிரம் பெறுமதியான கோழி உட்பட அவற்றுக்கான 91 பண்ணைகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும் காளான் வளர்ப்பு, தெளிக்கம் நீர் பாசனத்திட்டம், விவசாய உற்பத்திகளுக்கான பெறுமதி சேர் வசதிகள் மற்றும் நன்னீர் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கள் போன்ற ஐந்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதுதவிர இவ்வாண்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசமாகிய வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 15 விவசாயக் கிணறுகள், புனரமைக்கப்பட்ட 6 விவசாய நீர்ப்பாசன சிறிய குழங்கள் உட்பட ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் வீதம் இடப்பட்ட அடைச்ச கல் குளம், இரும்பன்டகுளம், கண்டியனாறு குளம், நல்ல தன்னி ஓடை குளம், பொக்கட்டச்சேனை குளம் தொடர்பாகவும் முன்னேற்றங்கள் இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்