கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் இராஜினாமா
கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் அவர் தனது இராஜினாமாவை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில், சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை முன்வைத்து, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் தோடம்பழ சின்னத்தில் களமிறக்கப்பட்ட சுயேச்சைக்குழு சார்பில் 19ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு இவர் வெற்றியீட்டியிருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாக முஹர்ரம் பஸ்மீர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை