உடுத்துறையில் சுனாமி ஆழிபேரலையினால் உயிரிழந்தவர்களின் நினைவு அனுஷ்டிப்பு

ஆழிபேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவு நிகழ்வு இன்று உடுத்துறை நினைவாலயத்தில் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அனுசரணையுடன் உணர்வு பூர்வமாக காலை 9.05 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொது நினைவு சுடரை ஏற்றியதை தொடர்ந்து உறவுகள் தத்தமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பருத்துறை பிரதேச சபையின் தவிசாளர் பச்சிலைபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து நினைந்துருகினர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.