சுனாமியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
சுனாமி பேரலையின் போது உயிர் இழந்த உறவுகளை நினைவுகூரும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
சுனாமிப் பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவையும், அதன்போது காவு கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானோரையும் நினைவு கூரும் வகையிலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். அலுவலகத்தில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், கடற்றொழில் அமைச்சரை சந்திப்பதற்காக வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை