அம்பாறை ஊடக அமையம் உதயம்! குவியும் வாழ்த்துக்கள்!!

அம்பாறை ஊடகத்துறையின் மற்றுமொரு மைல் கல்லாக அம்பாறை ஊடக அமையம் உருவாக்கம் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியால் அம்பாறை மாவட்ட ஊடக அமையம் திறக்கப்பட்டு ஊடக சந்திப்புக்கள் நடைபெற்று வருகிறது.

குறித்த ஊடக அமையத்தினை வரவேற்று பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் குரலாக இந்த அம்பாறை மாவட்ட ஊடக அமையம் இன,மத, பாரபட்சம் இன்றி எதிர்காலத்தில் செயற்பட உள்ளது.

இனி வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்திற்கான ஊடக சந்திப்புக்கள் மேற்படி ஊடக அமையத்திலேயே நடைபெறும் என்பதனால் குறித்த ஊடக அமையத்திற்கான அங்கிகாரத்தை அனைவரும் வழங்கி தங்களது ஊடக சந்திப்புக்களை இந்த ஊடக அமையத்தில் நடாத்துமாறு கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமான கஜரூபன் தெரிவித்துள்ளார். Email- amparapressclub@gmail.com

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.