ஜனாஸாக்களை எரிக்கும்படி பௌத்த தேரர்கள் கொழும்பில் போராட்டம்

கொரோனா வைரஸினால் இலங்கையில் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரித்துவிடும்படி வலியுறுத்தி கொழும்பில் பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் அணிதிரண்டு பெருந்திரளான முன்னணி பௌத்த தேரர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்காக பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை அங்கு வந்திருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்