மாகாண சபை தேர்தல் திகதி குறிப்பிடப்படாது ஒத்திவைப்பு.

கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் மஹா சங்கத்தினரின் வேண்டுகோள் உள்ளிட்ட நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் புஞ்சிஹேவா மாகாண சபை தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னர் தேர்தல்கள் நடத்தப்படும் முறைமை தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேற்படி சட்டத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வட்டாரங்களில் சில தரப்பினர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் மேலும் சில தரப்பினர் மாகாணசபைத் தேர்தல் தற்போது அவசியமில்லையென்றும் மேலும் சிலர் மாகாணசபை முறைமை நாட்டுக்கு அவசியமா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.