வாழைச்சேனை சுகாதார பிரிவில் இவ்வருடம் 508 பேருக்கு டெங்கு நோய்…

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முப்பதாம திகதி வரை 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும், கிணற்றுக்குள் மீன்கள் போடும் நடவடிக்கையும், டெங்குபுனை விசிறல் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்; என பலரும் கலந்து கொண்டு வளாகம் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கை இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

அத்தோடு வாழைச்சேனை பகுதியில் மக்கள் பாவனையில் காணப்படும் இருநூறு கிணறுகளுக்கு மீன் குஞ்சிகள் போடும் நடவடிக்கையானது ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களை இணைத்து மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முப்பதாம் திகதி வரை 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் மாத்திரம் 118 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.