மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைப்பது தருனம் பார்த்து எம்மை பழிவாங்குவது போல் உள்ளது : மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்…

நூருல் ஹுதா உமர்.

“மலை சுமந்த அனுமானுக்கு மாங்கொட்டை சுமப்பது ஒன்றும் பெரிதல்ல” என்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.  கல்முனையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் சிலர் நீங்கள் மேற்கொண்ட Rapid Antigen Test பரிசோதனைக்கு பயந்து ஒழிந்துவிட்டார்கள் என்றால், அதற்கு கரணம் என்னவென்று நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அதைவிடுத்து அம்மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைப்பது தருனம் பார்த்து  எம்மை பழிவாங்குவது போல் உள்ளது. ஒரு துறைசார் பொறுப்பதிகாரியாகிய நீங்கள் பொறுப்புடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள். பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணனை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,

காயப்பட்ட ஒரு சமூகத்தின் மீது வேல் பாய்ச்சக்கூடாது. வர்த்தகர்கள் தொடர்பாக உங்கள் செயற்பாடுகளுக்கு எமது வர்த்தக சங்கங்கள் உள்ளன, கல்முனை நகர் சார்பான மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளார்கள், அவர்களிடம் தொடர்பு கொண்டு செயற்படுங்கள். நாங்கள் அதற்கு சிறந்த தீர்வை தருகின்றோம்.
அதை விடுத்து கல்முனை நகரை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளிடனும், கல்முனை தமிழ் முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் கட்சியாளர்களையும்  வைத்து நீங்கள் முடிவெடுப்பது உங்கள் முறையற்ற முகாமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

எனவே எதிர்காலத்திலாவது மனித நேயத்துடன் செயற்படுங்கள். உங்களிடம் இருக்கும் அந்த கல் ஒருநாள் எங்கள் கரங்களிலும் வரும். அந்த நேரம் நாங்கள் உங்களை போல் செயற்படமாட்டோம். நீதம் எங்களிடம் நிறையவே உள்ளது. சாதி மத பிரதேச வாதங்கள் கடந்து செயற்படவேண்டும் எனும் தலைமையிடம் அரசியல் கற்றவன் என்றவகையில் உங்களுக்கு இதை நான் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.