மட்டக்களப்பு -மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் அரச கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்  அரச கடமைச் செயற்பாடுகளை புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2021 )பிரதேச செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உயரதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய கொடி பிரதேச செயலாளரினால் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதுடன், நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவருக்குமாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு, அரச சேவை உறுதியுரையுடன் தமது சேவைகளை ஆரம்பித்துடன், பிரதேச செயலாளரினால் ஒழுக்கமுள்ள நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை நேர்மையாக ஆற்ற வேண்டும் எனும் தொனிப்பொருளில் சிற்றுரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்