கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி இன்று கடமையேற்றார்…

(சர்ஜுன் லாபீர்,றாசிக் நபாயிஸ்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.ஆர்.அஸ்மி இன்று (02)தனது கடமைகளை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வருடாந்த இடம்மாற்றத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக செயற்பட்ட டாக்டர் எம்.ஐ. றிஸ்னி முத்து, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.