வவுனியா சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்…

வவுனியா, சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அடம்டகாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று இரவு (01.01) சின்னத்தம்பனை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்குள் சென்று பயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கடன்பட்டு வயல்களை விதைத்த போதும் யானைகள் குறித்த வயல் நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், தொடர்ச்சியாக காட்டு யானைகள் தமது வயல் நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் அதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.