வெடிபொருட்களை திருடிய மூவருக்கு விளக்கமறியல்!
கண்டி, மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள குவாரியொன்றிலிருந்து வெடிபொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான மூன்று நபர்களையும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை மாவனெல்ல நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார்.
குவாரியின் ஊழியர்கள் குழுவினர் 15 கிலோ அம்மோனியா நைட்ரேட், ஆறு வாட்டர் ஜெல், 15 டெட்டனேட்டர்கள் மற்றும் பல பொருட்கள் திருடப்பட்டதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்
இந் நிலையில் இது தொடர்பில் அரச ஆய்வாளர் துறையால் தொகுக்கப்பட்ட அறிக்கை ஜனவரி 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.
சந்தேக நபர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்றுகாவல்துறையினர் கூறியுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை