காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இவ் ஆண்டிற்கான உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு…

 

அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இவ் ஆண்டிற்கான உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது வருகைதந்த அதிதிகள் அனைவரும் மங்கள விளக்கேற்றிவைத்தனர்.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும்,ஆன்மிக அதிதியாக காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் மற்றும் சாந்தரூபன் குருக்களும் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்தினார்கள்
மேலும் சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தின் தலைவர் திரு நந்தேஸ்வரன் ஏனைய உறுப்பினர்கள் காரைதீவு பிரதேச ஆலயங்களின் பிரதிநிதிகள்,அம்பாறை மாவட்டகலாசார உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச கலாசார உத்தியோகத்தர்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அறநெறிப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அதனை நெறிப்படுத்தி செல்வதற்கும் அனைத்து செயற்பாட்டிற்கும் இந்து கலாசார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ஒரு பிள்ளை பாதை மாறிப்போகின்றது என்றால் அது ஒழுக்கம் யில்லாத குழந்தையாக பார்க்கலாம் எனவே ஒழுக்கத்தினை கொண்ட சமூகத்தினை உருவாக்க வேண்டியதுதான் எங்களது இலங்கை நாட்டினதும் உலக நாட்டினதும் பிரச்சினையாக அமைகின்றது இதனை கருத்தில் கொள்ளவேண்டிய திணைக்களமாக இருக்கின்ற இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம். எங்களுடைய ஒழுக்கங்களையும் கலாசார விழுமியங்களையும் சமூகத்தில் கொண்டுவரவதற்காகத்தான் இந்த அறநெறிப்பாடசாலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என கவனத்தில் நாங்கள் கொள்ளவேண்டும் என காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தெரிவித்தார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் மட்டும் அல்லாது அறநெறிமானவர்களும் இவ் ஆண்டில் தமது கடமைகளை சிறப்பான முறையில் எடுத்துவைப்போம் என உறுதிமொழி எடுக்கின்ற ஓர் நிகழ்வாக இது காணப்படுகின்றது.

எமது நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பது போல மாணவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என இன் நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது. அந்த அளவிற்கு அவர்களின் செயற்பாடு காணப்படுகின்றது. என காரைதீவு இந்து சமய விருத்திச் சங்க தலைவர் திரு.எஸ்.மணிமாறன் அவர்கள் தெரிவித்தார்.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்ற இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் ஆளுமைமிக்க ஒருவராவார் அறநெறி கல்வியிலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

அதேபோன்று இவ் அசாதாரண சூழலிலும் மாணவர்கள் ஒழுக்கத்திழும் சமய விழுமியங்களில் அறநெறி மாணவர்கள் திகழவேண்டும் இந்து சமய பண்பாட்டினை எமது நாட்டில் ஏற்படுத்தவேண்டும் சென்றவருடம் யோகாசன நிகழ்வுகள் போன்றசெயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தோம் மாணவர்களுக்கு அறநெறிக் கல்வியினை வளர்த்துக்கொள்ளவேண்டும் பல போட்டி நிகழ்வுகளும் மாவட்ட ரீதியாகவும் இடம் பெற்று பரிசில்களையும் பெற்றிருந்தனர். பாடவிதான செயற்பாடுகள்,நீதிநூல்கள் ,தியானங்கள் ஊடாக மாணவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்ளவேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு நன்றியினை தெரிவிப்பதுடன் உண்மையிலே அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் தங்களது அளப்பரிய சேவையினை செய்துவருகின்றனர் அவர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானது யில்லை அப் பிரதேசங்கள் உள்ள ஆலயங்கள் இவர்களுக்கு உதவி செய்பபர்களாக முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.