வாழைச்சேனையில் ஜனவரி மூன்று நாட்களும் 37 பேருக்கு டெங்கு!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 03ம் திகதிவரை 37 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில் இன்று புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் சுத்தப்படுத்தும் நிகழ்வு பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தலில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் முப்பத்தோராம்; திகதி வரை 587 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தின் முதல் மூன்று நாட்களுக்குள் மாத்திரம் 37 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; மேலும் தெரிவித்தார்.

இன்று புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்த நான்கு பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.