கிளிநொச்சியில் -தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடார்த்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று(ஆரம்பமானது. வடக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் வடக்கு மகாணத்தில் வீட்டுத்தோட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர்களிற்கு சான்றிதழ்களும் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துக்களேதுமில்லை