மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதூர் 08 ஆம் குறுக்கு பிரதான வீதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் திறப்பு !
நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதூர் 08 ஆம் குறுக்கு பிரதான வீதியானது ஒரு கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு
மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்று குறித்த வீதியினை திறந்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வை.வாசுதேவன், மாவட்ட பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள் மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள்ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை