யாழ்- வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை!

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஏனைய பகுதிகளில் உரித்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென  சோ. சுகிர்தன் கூறியுள்ளார்.

இந்த விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.